
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா இராசலிங்கம் அவர்கள் 25-03-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, செல்லமுத்து தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற இரத்தினம், சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற நந்தகுமார் மற்றும் கருணாகரன், சிவகுமார்(நல்லூர் ப.நோ.கூ. சங்கம்), ஜெயக்குமார்(கனடா), ஜெயக்குமாரி(லண்டன்), கருணாவதி, செந்தில்குமார்(கனடா), சிவாஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தங்கம், மயில்வாகனம், இராசம்மா, சிவபாக்கியம், பொன்னுத்துரை மற்றும் தங்கரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவசோதி, சுபாஜினி, சுபாஜினி, ராஜ்குமார், முருகதாஸ், சுபாசினி, சிவகுமாரன்(சாரங்கா நகைமாடம்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தனுஷன், நிரோஷன், தனுஷியா, சஹானா, ஆதவன், ஆதித்தன், அக்ஷயன், ஷானுஜா, சஞ்சயன், சிவானுஜன், விதுஷா, வினிஷா, கஷிகா, கவிப்பிரியா, மதுஷி, வர்சினி, சர்ஞ்சினி, தருணிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-03-2019 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கட்டையாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நான் உங்கள் இழப்பை கற்பனை செய்து பார்க்க முடியாது. ஏதாவது இருக்கிறதா என்று எனக்கு தெரியப்படுத்துங்கள், நான் எதையும் செய்ய முடியும். உங்களுடன் ஞாபகமிருக்கிறோரின் அன்பில் ஆறுதலும் சுகமும் காணலாம்....