நுவரெலியா பொகவந்தலாவையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லையா காளிமுத்து அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
சுற்றமும் உற்றவருமும் புடைசுழ
கொற்றவை வழிவந்த – நல்ல
முத்துக் கறுப்பி பெற்ற தவப்புதல்வ!
எங்கள் முற்றம் அனைத்தும் வாடிக் கிடக்கிறது – உங்களை
நித்தமும் காணக் கிடைக்காது
நீங்கள் வாழ்ந்த இடங்கள் எல்லாம் வரண்டு போய் உள்ளது
எங்கள் கண்களைத்தவிர!
பெற்ற பிள்ளைகளை எதிர் பார்த்து
காத்திருந்த மனைவியை
அன்பான பேரப்பிள்ளைகளை
விட்டுப் போக
எப்படி ஐயா துணிந்தீர்
மாற்றானும் மெச்சும் உங்கள் விருந்தோம்பலை
காற்றிலே வந்து கவர்ந்து சென்ற – அந்த
கூற்றவனுக்கும் சிறிது கருணை இல்லை
உண்மைதான்! காலன் யாருக்கும்
காத்திருப்பதில்லை
நேற்றைக்குப் போலுள்ளது உங்கள் நடமாட்டம்
ஒவ்வொரு படிப் படியாய் இறங்கி வந்து - நீங்கள்
நெற்றியில் எங்களுக்கு இடும்
அந்த திருநீற்றின் குளிர்ச்சியும் - எங்கள்
உணர்ச்சியில் உண்டு
அன்னமிட்ட அந்த கைகழும் - இன்று
அசைவற்றுக் கிடக்கிறது
எங்கள் நெஞ்சங்கள் எல்லாம் செயலற்று இருக்கின்றது
காளிமுத்து மைந்தனே!
கோணமலையில் அரசனாக வாழ்ந்தீர்
ரொறன்ரோவில் நல்ல தகப்பனாக இருந்தீர்கள்!
எங்கள் அனைவருக்கும் ஒரு இணைப்புப் பாலமாகி மறைந்தீர்கள்!
உங்கள் உறுதியும் தளராத நம்பிக்கையும்
இனிவரும் காலங்களில் - எங்கள்
வழிவரும் அனைவருக்கும் வாழ்க்கைப் பாடங்கள்!
உற்ற நண்பனாய்
நல்ல தகப்பனாய்
மேன்மையுற்ற உறவாய்
நல்ல மனிதனாய் வாழ்ந்த - உங்கள்
வாழ்க்கை எங்களை வழிநடத்தும்
உங்கள் நினைவுகள் எங்கள் நெங்சங்களில்
என்றும் நிறைந்திருக்கும்!
எங்கள் உணர்வுகளை புரிந்து
அன்போடு வருகை தந்து எங்கள்
கவலைகளை பங்கிட்ட அனைத்து உறவுகளிற்கும் நன்றிகள்!
ஆறுதல்களால் எங்களை ஆற்றுப் படுத்திய
நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்!
நேரம் காலம் பாராது துர இடங்களில் இருந்து தக்க
நேரத்தில்
வந்திருந்த உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்!
பிரிந்த துயர் கேட்டு தவித்திருந்த வேளையில் தொலைபேசியுடாகவும், முகநூல்,மின்னஞ்சல்,RIPBOOK ஆகியவை மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களிற்கும், இரங்கல் தெரிவித்தவர்களிற்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களிற்கும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்புள்ளங்களிற்கும் எமது குடும்பத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலிக்கான மதிய போசன நிகழ்வு 05-05-2025 ந.ப 01:00 மணியளவில் 86 Bayhampton Dr, Brampton, ON L6P 3A9, Canada எனும் முகவரியில் நடைபெறும். அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
In Loving Memory of Selliah Kalimuthu’s 31st Remembrance Day
There are not enough words to fully express our heartfelt gratitude for the sympathy, love, and support you have extended to our family during this incredibly difficult time. Thank you from the bottom of our hearts. Please join us for lunch at 86 Bayhampton Drive, Brampton ON L6P 3A9, Canada on Monday May 05th, 2025 after 1 pm.
I have known him for a long time, from 1995. He is a very humble, down-to-earth person loved by all. He is also a very good father and a very good father-in-law. we will miss him. May his soul rest...