
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு ஞானவைரவர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா தவனேஸ்வரன் அவர்கள் 20-07-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லலிதா அவர்களின் அன்புக் கணவரும்,
கஜனி(கனடா), ஜனனி(லண்டன்), துஸ்யந்தினி(கனடா), தபேசன்(தபேசன் விவசாய மாளிகை), தாட்சாயினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுரேஸ்கரன்(கனடா), கோபிகிருஸ்ணா(லண்டன்), முகுந்தன்(கனடா), குகன்(Technical Assistant CE) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரமேஸ்வரி(கனடா), சிவலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமநாதன்(கனடா), நந்தகுமாரி(கனடா), செல்வராசா, செல்வநாயகம்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மதுஷா, ஜஸ்வின், அஸ்விதா, அக்ஷயன், அருணிகா, மதுஷயன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கிழக்கு கட்டையாலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தவனேஸவரன் அண்ணா எமது பாடசாலை பழையமாணவர் சங்க நீண்டகால நிர்வாக உறுப்பினர் அற்புதநர்த்தன வினாயகர் சனசமூக நிலைய உறுப்பினரும் ஆவார் . வாசகசாலைக்கு நீண்டகாலமாக செய்தித்தாள் வழங்கிய அனுசரணைய அனுசரணையாளர்...