யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம் இறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை யோகேஸ்வரன் அவர்கள் 12-12-2020 சனிக்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை நாகம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இளையபிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,
புங்குடுதீவு 6ம் வட்டாரம் இறுப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லத்துரை(ஆசிரியர்), சுப்புலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
நடேஸ்வரன், குகனேஸ்வரன், விஷ்னுகுமார், சுகந்தினி, சுதாஜினி, சுந்தரேஸ்வரன், அகிலேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிறேமலதா, வாசுகி, சிவனேசன், சபேசன், கவிதா, விஜயகீதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம், நமசிவாயம், கார்திகேசு ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்ற செல்லம்மா அவர்களின் அன்பு மருமகனும்,
பாலசிங்கம், காலஞ்சென்ற தெய்வேந்திரம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற யோகாம்பிகை, செல்லம்மா ஆகியோரின் பெறாமகனும்,
ராணிகா, சகாணா, அபிஷேக், அவநிதா, கிசான், தூசான், அஸ்விகா, தூஷாரா, ஷகீஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சேனுதா, சகிதா, கவின் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தன்னலமற்ற சமூகக் கரினையாளராக தன் வாழ்வை அர்ப்பணித்த தோழமையாளர் செல்லத்துரை யோகேஸ்வரன் சுவிசில் காலமாகிய தகவல் அதிர்ச்சியாக வந்தடைந்தது. 'நேற்று இருந்தான் இன்றில்லை!' எனக் காலம் நிலையாமைக்...