Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 APR 1936
இறப்பு 26 DEC 2016
அமரர் செல்லத்துரை துரைசிங்கம் (J.p)
ஓய்வுப்பெற்ற ஆசிரியர் நீர்வேலி றோ.க.த.க.பாடசாலை, மீனாட்சி அம்மன் ஆலய முன்னாள் தர்மகர்த்தா, தலைவர் மற்றும் போசகர், சாரதா சனசமூக நிலைய ஸ்தாபகர்-சங்கத்தானை, பரம்பன்கிராய் தமிழ் கலவன் பாடசாலை ஸ்தாபகர்- பூநகரி
வயது 80
அமரர் செல்லத்துரை துரைசிங்கம் 1936 - 2016 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை துரைசிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

வாழ்க்கை என்பது இறைவன் அவன்
 வகுத்த வரைதானே அடுக்கடுக்காக
 ஆண்டுகள் எட்டு சென்றன
 அருகில் நீங்கள் இல்லாததால்
 உங்கள் அன்பு தனை இழந்தோமே நாம்!

அடுத்தொரு பிறப்பு உண்டென்றால்
 அப்பொழுது மட்டுமல்ல- ஏழேழு பிறப்பிலும்
 எமக்கே அப்பாவாய் பிறந்திட வேண்டுகிறோம் அப்பா!

வானத்தை விட்டு நிலவையும்
 வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
 உங்கள் நினைவுகளை- எங்கள்
 நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது
 நெஞ்சில் உங்கள் நினைவுகளை சுமந்தே
 நெடுங்காலம் நாம் இங்கே நிலைத்து வாழ்வோமே
 வானில் விண்மீனாய் இருந்து
 எம் வாழ்வை வளப்படுத்துவீரே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: சுகந்தன்(மகன் - சுவிஸ்)