
மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். சண்டிலிப்பாய் ஐயனார் கோவிலடியை வதிவிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை திருஞானம் அவர்கள் 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புத்திரரும், இராமலிங்கம், காலஞ்சென்ற இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மராணி அவர்களின் அன்புக் கணவரும்,
கேமளா அவர்களின் பாசமிகு தந்தையும்,
தில்லைநடேசன் அவர்களின் அன்பு மாமனாரும்,
இராசமணி, சிவஞானம், ஞானமணி, சிவமணி, காலஞ்சென்ற ஞானகுருபரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கமலாம்பாள், சண்முகராசா, பஞ்சலிங்கம் மற்றும் கிருஷ்ணராசா(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான செல்வராசா, சிவபாக்கியம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஆரணி, பிரவின், சரண் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.????????