யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம், பிரான்ஸ் Bobigny ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை தவமணி அவர்களின் நன்றி நவிலல்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூ றியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி கிரியை 25-10-2025 சனிக்கிழமை அன்று பி.ப 01:00 மணிமுதல் பி.ப 08:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெறும் அதனைத்தொடந்து ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும், மதிய போசனத்திலும்கலந்து உதவுமாறு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
நான் உங்களுக்கு தனியாக அறிவிக்காவிட்டாலும் மன்னித்துக்கொண்டு இதில் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
வீட்டு முகவரி:
33 Rue Henri Nozieres, 93000
Bobigny
Arret lieutenant Lebrun BUS 148