பாசமிகு நண்பன் தனா. தனா எனப் பலராலும் அறியப்பட்ட இவர், 1984 ம் ஆண்டு இதே மார்கழி மாதம் 9ம் திகதி எம்முடன் அறிமுகமானது மறக்க முடியாத நினைவுகள். கம்பீரமும் தளராத உறுதியும் அவரிடம் குடிகொண்டிருந்த குணாம்சம் ஆரம்பகாலத்தில் பல செயலூக்கம் கொண்ட இளைஞனாகத் திகழ அத்திவாரமிட்டது. மற்றவர்களை மதிக்கும், தோழமைக்குத் தோள்கொடுக்கும் நெஞ்சுரம் கொண்ட செயல் நோக்கம் அவரின் நட்பு நிலைக்கக் காரணமானது. 1985 ம் ஆண்டு தமிழர் நலன் பேண சூறிச்சில் உருவாக்கப்பட்ட சுவிஸ் தமிழர் சங்கம் சூறிச்(Swiss Tamil Centre – Zurich) மேற்கொண்ட தமிழர் நலன் காக்கும் திட்டங்களில் அக்கறையுள்ள செயற்பாட்டாளனாகத் திகழ்ந்தவர். 1986ம் ஆண்டு நாட்டின் யுத்தத்தினால் ஏதிலிகளாக்கப்பட்ட எம் தேசத்துறவுகளுக்காக இங்கு அமைக்கப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சூறிச் கிளையின் முதல் பொருளாளராக சி. ஞானசம்பந்தனுடனும்(சிவாஜி) மற்றும் பலருடனும் ஊக்கத்துடன் பணியாற்றியவர். அடக்கமான பேச்சும் அன்பான உபசரிப்பும் தனக்கேயுரித்தான பண்பாகக் கொண்ட தனா பலராலும் மதிக்கப்பட்ட மனிதராகத் திகழ்ந்தார். திருமணத்தின் பின் தன் அக்கறைகளை மனைவி பிள்ளைகளென மேலோங்கி வாழ்ந்தாலும், நண்பர்களின் தொடர்புகளைப் பேணியமை நட்பெனும் சத்தியின் வலிமையை உறுதிப்படுத்தியது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன்னுழைப்பை பொதுநல செயல்கட்கு அர்பணித்த மனிதநேயம் மிக்க நல்மனிதராக வாழ்ந்தவர். தொழிலிடத்தில் கண்ணியம்மிக்க தொழிலாளராக கடமையை பேணி அதிகாரிகளுடனும் சக தொழிலாளர்களுடனும் நல்லுறவை, மனநிறைவுடன் வாழ்ந்தவர். சூரிச் முருகன் கோவிலின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் தன்னான அளப்பரிய சேவைகள் புரிந்து முருகபக்தனாக மனைவி பிள்ளைகள் மீது பாசம்மிக்க தந்தையாக வாழ்ந்தார். தொழில் ஓய்விக்காலத்திலும் Palmyra – Consulting தமிழர் ஆலோசனை நிலையத் தில் உதவியாளராகச் செயற்பட்டு இறுதிக்காலம் வரை தீவிரம்மிக்க செயற்பாட்டாளனாக திகழ்ந்தவர். பாசம்மிகு நண்பன் எம்முடன் இன்று இல்லை என்பதை ஏற்க மனம் மறுக்கிறது. முருகன் காலடியில் மீளாத்தியில் கொள்ளும் முருகன் காலடியில் மீளாத்தியில் கொள்ளும் தனாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்திபோம். அன்னாரின் பிரிவால் துயறுற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள், சகோதரங்கள் மற்றும் நண்பர்கட்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!