Clicky

பிறப்பு 20 JUN 1931
இறப்பு 07 NOV 2023
திரு செல்லத்துரை சோமசுந்தரம்
வயது 92
திரு செல்லத்துரை சோமசுந்தரம் 1931 - 2023 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பொற்குடமே புண்ணியனே சோமையா பொற்கோவில் பணியெல்லாம் செய்தாய் ஐயா பொலிவான உன்முகத்தை காண்போமா பொலிவுறவே புன்சிரிப்பை உதிர்ப்பாயே பொற்புறவே உதவிகளை நாடிச் செய்தாய் பொற்குவையே பூந்தளிரே உதிர்ந்ததேனோ? பொதுத்தொண்டே புண்ணியமாய்ச் செய்தாய் என்றும் பொதுநன்னை கொண்டோ சென்றாய் ஐயா வாடாத உன்முகத்து வனப்பெல்லாம் எங்கே ஐயா வாடமுற உன்துணையை விடுத்து நீங்கிதேனோ ஐயா விட்டகலா உன்னோடு அழைத்தே செல்வாய் விட்டுத்தான் சென்றனை ஏன் ஐயா நீயும்? கனடாவின் ஆலயங்கள் கால்கள் பதித்து கனவானாய் கலகலத்து சிரித்து வாழ்ந்தாய் கனிவான உன்மொழியில் கட்டுண்டோர் கண்கலங்க வைத்துச் சென்றனை ஏனோ ஐயா! அண்ணலென என்மனத்தில் வாழ்ந்த கோவே அண்மித்தாய் இறைபதமே என்றுநாமும் எண்ணித்தான் ஆறுதல் கொள்ள சித்தம் எண்ணத்தில் சாந்திகொள வேண்டுகின்றோம் வானுறை தெய்வந்தான் உனையழைத்தார் என்றி வானவரை தொழுது ஏத்துகின்றோம் அவர்பால் வானவராய் வாழ்ந்திடவே திடசங்கற்பம் பூண்டீர் வானிருந்து எமக்கருள வேண்டுகின்றோம் ஐயா!
Write Tribute