யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London, Sunderland ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை ஸ்கந்தராஜா அவர்களின் நன்றி நவிலல்.
இதயம் அன்பை முத்தமிட்டு
இழப்பை தாங்க முடியாது சத்தமிட்டு
சித்தமினிக்கும் எங்கள் சகோதரன் இறைவனடி
எண்ண முடியாத நேரத்தில் எம்மை விட்டு நீங்கினார்
பிரிவுகளால் வலிகள் தந்தவனே
வசந்தத்தை தொலைத்து தூரமானாயோ
புன்னகை உன் காணாது தவிக்கின்றோம்
உன் மொழி கேளாது அழுகின்றோம்
கண்ணீருக்கு கலப்படம் தேவையென்றோ
குருதி படிந்த நினைவுகளை தந்துவிட்டாய்
காலங்கள் தேய்ந்திடினும்
உன் நினைவுகள் அழிந்திடுமோ
முப்பத்தொராவது நாள் இன்று ஆனதுவே
எப்பொழுதும் இமைப்பொழுதும் எம் நெஞ்சில்
நீங்காது உம் நினைவுகள்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.