யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London, Sunderland ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை ஸ்கந்தராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 03/08/2023.
நல்ல தம்பியாய் நல்ல நண்பனாய்
எப்போதும் எம்மோடு இணைந்து நின்றவனே!
ஆண்டு ஒன்றல்ல ஆயிரம் ஆனாலும்
மறக்க முடியாத மகத்துவம் நீ...
நினைவிலும், நித்திரையிலும் , எங்கள் உணர்விலும்
உள்ளத்திலும் எப்போதும் - நீ
கனவிலும், கற்பனையிலும்
எங்கள் கண்பார்க்கும் இடமெல்லாம் - நீ
நீ இல்லாத நாட்கள்
உயிரில்லாத நொடிகளாய் - போகுதய்யா..
நீ வாழ்ந்த வீடு நீ கடந்த இடம் என்று
உன்னை நாங்கள் நினைத்திருக்க
நீ மட்டும் எங்கு போனாய்
எங்களைவிட்டு - ஏன் பிரிந்தாய்?
ஓராண்டு என்ன ஓராயிரம் ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவுகளை பசுமையாக எப்போதும்
எம் இதயத்தில் தெய்வமாய் சுமந்து நிற்போம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி நிற்கின்றோம்.