யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Saarbrücken ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை ரூபன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ இந்த மண்ணில் மீண்டும்
வந்து பிறக்க வேண்டும்
உனை அள்ளி எடுத்து
அணைக்க வேண்டும்!
பிறப்பின் இரகசியம் யாதெனக்
கேட்டேன் பிறந்து பார் என
இறைவன் பணித்தான்
பாசம் யாதெனக் கேட்டேன்!
பகிர்ந்து பார் என இறைவன் பணித்தான்!
எம் அன்புச் செல்வம் நீ
எம்மை விட்டு பிரிந்து நான்கு ஆண்டுகள்
ஆனால் உன் பசுமையான
நினைவுகள் எம்மனதை விட்டு அகலாது!
நீ வளமோடு வாழ்வாய் என வாஞ்சையுடன்
நாங்கள் கண்ட கனவு ஏராளம்!
கண்மூடி விழிப்பதற்குள் கணப் பொழுதினில்
நடந்தவைகள் நிஜம் தானா என்று நினைக்கும்
முன்னே மறைந்தது ஏனோ!
நீ வான் உயரம் தெய்வத்தில்
ஒன்றாகி நின்று எமையெல்லாம் பார்த்திடுவாய்
என எண்ணி நான்காவது ஆண்டு
நினைவு நாளில் விழி அருவியாய் ஏங்கியே
நிற்கின்றோம் உமைப்பார்த்து!!
சாந்தி! சாந்தி!! சாந்தி!!!