யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Saarbrücken ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை ரூபன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ரூபன் எனும் பெயர் கொண்டு
செல்லத்துரை கனகராணி தம்பதிக்கு
முதல்மகனாய் உதித்து
புத்திர பாக்கியத்தைக் கொடுத்தவனே!!
ரூபன் என்னும் பெயர் கொண்டு புஸ்பதேவி எனும்
பூமாவுக்கு கணவன் எனும் ஸ்தானத்தை அளித்தவனே
ரூபன் எனும் பெயர் கொண்டு உன் தம்பிகளுக்கும்,
தங்கைக்கும் நல்ல அண்ணன் எனும் உறவை உணர்த்தியவனே!!
ரூபன் எனும் பெயர் கொண்டு உன் உறவினர்க்கும்,
நண்பர்க்கும் நல்ல நட்பு என்ற இலக்கணமாய் வாழ்ந்தவனே
ரூபன் எனும் பெயர் கொண்டு நம் ஊர், நம் நாடு
என்ற கொள்கைக்கு மதிப்பளித்து
இலட்சியப் பாதையில் நடந்தவனே
இவர்கள் யாவர்க்கும் மூச்சாய் இருந்த நீ இடையில்
உன் மூச்சை நிறுத்தியதேனய்யா
ரூபன் எனும் உன் பெயரை என்நொடியும்
உச்சரித்தே உன் நினைவுகளுடன்
வாழ்வோம் நம் மூச்சுக்களை நிறுத்தும் வரை....!
ஓம் சாந்தி.... சாந்தி.... சாந்தி......