

யாழ். நாரந்தனை வடக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது வட்டு மேற்கு திருஞானசம்பந்தர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை இராசதுரை அவர்கள் 20-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து மீனாட்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வப்பாக்கியம்(பிரித்தானியா) அவர்களின் பாசமிகு கணவரும்,
சிவசக்தி(பிரித்தானியா) அவர்களின் பாசமிகு தந்தையும்,
தில்லை நடராஜா(பிரித்தானியா) அவர்களின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்ற சகுந்தலையம்மா, பொன்ராசா(ஓய்வுபெற்ற வேலைத்திட்ட மேற்பார்வை அதிகாரி), சரஸ்வதியம்மா, சுப்பிரமணியம்(தங்கராசா), ஏகநாயகியம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை, இரட்ணாதேவி, பாலசுந்தரம் மற்றும் லோகேஸ்வரி, காலஞ்சென்ற கோபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கதிர்காமநாதன், காலஞ்சென்ற ஜெகநாதன், மனோறஞ்சிதன், தவத்தலைவி(சுவிஸ்), கலைச்செல்வி, திருச்செல்வி, சுகன்னியா(முன்னாள் பிராந்திய முகாமையாளர்- வடக்கு, பிரதம பொறியியலாளார், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை- யாழ்ப்பாணம்), குருபரன்(முன்னாள் விவசாயத்திணைக்களம்- யாழ்ப்பாணம்), துஷ்யந்தி(முன்னாள் ஆசிரியை, மல்லாவி மத்தியகல்லூரி), காலஞ்சென்ற முகுந்தன், தர்சினி(முன்னாள் விவசாய போதனாசிரியர், விவசாயத்திணைக்களம்- யாழ்ப்பாணம்), சந்திரவதனி(முன்னாள் உபதபால் அதிபர், எழுவைதீவு), பத்மினி(ஆசிரியை- யாழ்/வேலணை கிழக்கு மகாவித்தியாலயம்), இளங்கோவன்(ஆசிரியர்- கிளி/பளைறோ. க. த. க பாடசாலை), கருணாகரன்(சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேசசெயலகம் ஊர்காவற்துறை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவகுமரன், காலஞ்சென்ற திருக்குமரன், செல்வகுமரன், பூங்கோதை, சிவசக்தி ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-08-2019 புதன்கிழமை அன்று வட்டு மேற்கு வட்டுக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நாரந்தனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எங்கள் அன்பிற்கும் அறிவிற்கும் வழி காட்டிய ஆசானின் ஆத்மா சாந்தி பெற இறைவனைப்பிராத்திக்கின்றேன் ஓம் சாந்தி ! சாந்தி! சாந்தி