Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 13 APR 1940
மறைவு 13 APR 2025
அமரர் செல்லத்துரை இராசரட்ணம்
ஓய்வுபெற்ற தபால் அதிபர்
வயது 85
அமரர் செல்லத்துரை இராசரட்ணம் 1940 - 2025 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவில் மேற்கு கேணியடியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, கொழும்பு, வவுனியா நெடுங்கேணி, பிரித்தானியா Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் செல்லத்துரை இராசரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று மறைந்து விட்டது அன்பானவரே
 அகலுமா பிரிவின் சோகம் மறையுமா நினைவின் பாசம்

நினைக்கும் போது எல்லாம்
உங்கள் நினைவோடு வாடுகின்றோம்
 காற்றாகி போனதுவா தேகம்
 காலத்தால் மறைந்திடுமோ நின் நேசம்

ஏன் எங்களையெல்லாம் தவிக்கவிட்டு
 சென்றாய் ஏங்கித் தவித்து
 அழுது தேடுகின்றோம் கண்முன்னே வருவீர்களா?

விண்மீது ஒளிரும் நட்சத்திரங்களில்
 உங்களைத் தேடுகின்றோம் விழிநீர் துளிர்த்து
 உங்கள் பாதங்களில் பூவாய்த் தூவுகின்றோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.


13-04-2025 அன்று இறைவனடி சேர்ந்த எங்கள் குடும்பத் தலைவர் அமரர் செல்லத்துரை இராசரட்ணம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் 02-04-2026 வியாழக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துகொள்கின்றோம்.

தகவல்: மனைவியும் குடும்பத்தினரும்.