யாழ். கொக்குவில் மேற்கு கேணியடியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, கொழும்பு, வவுனியா நெடுங்கேணி, பிரித்தானியா Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை இராஜரட்ணம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...
இரத்தத்தை வியர்வையாக்கி
அல்லும் பகலும் அயராது உழைத்து
எங்கள் வாழ்விற்கு ஒளி கொடுத்த எம் தெய்வமே...
கைப்பிடித்த நாள் முதலாய் கண்னை
இமைகாப்பது போல் எம்மை காத்து வந்தீரே!
நினைக்கும் போது எல்லாம்
உங்கள் நினைவோடு வாடுகின்றேன்...
உங்கள் பிரிவை எங்களால் தாங்கமுடியாது
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நினைவஞ்சலி 18-005-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 12:30 மணிமுதல் பி.ப 3:00 மணிவரை நடைபெறும். அந்நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
WEALD RISE PRIMARY SCHOOL
ROBIN HOOD DR,
HARROW HA3 7DH,
My deepest sympathies to you and your families