யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Siegen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை பொன்னையா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அருமைச் சகோதரனே!
அனைத்தும் உனதருகில் இருந்தும்
முடியாமல் போனது எப்படி!
விதியா? இறைவனின் சதியா?
பாசமுள்ள உடன்பிறப்பே
பார் புகழும் சகோதரனே
நீ நடந்த பாதையெல்லாம்
எம் நினைவும் தொடர்கிறதே
பலமிழந்தோம் பரிதவிக்கின்றோம் உன் இழப்பை
எதிர் கொண்டு ஓராண்டு தான் ஆகினதோ?
உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
என்னுடன் பிறந்தவனே
என்னருமைச் சகோதரனே !
உன்னைத் தேடி என் கண்கள் களைத்ததடா...
விண்ணில் நீ கலந்துவிட்ட நாள் முதலாய்
எம் விழிகள் உறங்க மறுக்குதய்யா
கண்களில் நித்தம் ஈரம் கணப்பொழுதும் உன் சோகம்
நித்தம் நித்தம் உன் நினைவு நெருப்பாய் சுடுகுதய்யா
நாங்களும் வாழ்கின்றோம் பாவிகளாய்
உன்னை நினைக்கையில் உள்ளமே அழுகின்றது
இதயமும் பதறுகின்றது எம் உறவே
கட்டிய மனைவி கண்கலங்கி நிற்க
நீங்கள் வெகு தூரம் சென்றது ஏனோ
குடும்பத்தின் ஒளி விளக்காய்
மிளிர்ந்த எம் தெய்வமே!
நாம் பெற்ற பிள்ளைகள்
பாசத்துக்கு ஏங்கி நிற்க!
பாதியில் பிள்ளைகளை பிரிந்ததேனோ!
கண்ணில் அழுகை ஓயவில்லை எம்
கனவு வாழ்க்கை புரியவில்லை
விழிகள் உன்னை தேடுகையில் விழிநீர்
ஆறாய் ஓடுகிறதே!
நித்தமும் எம் நினைவில் நின்று கொண்டு
நிஜத்தில் இறைவனுடன் கலந்திட்ட உங்கள்
ஆத்மா சாந்தியடைய எம் கண்ணீரை மலர்களாக
காணிக்கையாக்கி பிரார்த்திக்கின்றோம்...!
He is my cousin and he is my doctor . we miss