

யாழ். பண்டத்தரிப்பு சாந்தையைப் பிறப்பிடமாகவும், சுவீடன் Helsingborg ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை நாகரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 19.10.2022
ஆண்டவன் அடி சேர்ந்து
ஆண்டு ஒன்று ஆயிற்று! ஆனாலும்
நாம் அழுகின்றோம் அம்மா அம்மாவென்று
கண்மணிகளாய் எமை ஆளாக்கிவிட்டு
காற்றோடு போய்விட்டீர்களே!
கண்களில் நிறைந்த நீருடனே- நாம்
கலங்குகின்றோம் அம்மா அம்மாவென்று
கண் இமைக்கும் நேரத்தில்
ஓர் ஆண்டு ஓடி மறைந்து விட்டது அம்மா..!
உங்கள் நினைவோ ஒவ்வொரு வினாடியும்
எங்களை வாட்டுது அம்மா..!
எங்கே அம்மா சென்றாய்
எங்களை எல்லாம் விட்டு விட்டு
எம்மை வாட்டும் இந்த சோகத்தை
தீர்த்து வைக்க வாருங்கள் அம்மா..!
பாசத்தோடும் பண்போடும் எமை
பாதுகாத்த எம் தாயே!
விண்ணிலே இருந்தாலும் எம் சந்ததிக்கு
ஒளி விளக்காய் ஒளி தந்து
வழி நடத்துங்கள் அம்மா!
வலிகள் தொடரும் போதும்
வழிகளை வலிமையாக்கி வாழ்கின்றோம்
அம்மா உன் நினைவோடே...!
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது எம் நெஞ்சம்...!!!
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.