Clicky

13ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 MAY 1940
இறப்பு 15 JUL 2013
அமரர் செல்லத்துரை கண்மணிஅம்மா
வயது 73
அமரர் செல்லத்துரை கண்மணிஅம்மா 1940 - 2013 தாவடி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், இணுவிலை வசிப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை கண்மணிஅம்மா அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.   

பதின்மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன அம்மா,
ஆனால் உன் நினைவு மட்டும்
நேற்றைப் போலவே நெஞ்சில் நிற்கிறது.
என் விழிகளில் நீர்த்துளி வந்த போதெல்லாம்,
அதைத் துடைக்க உன் கரங்கள் தேடுகின்றன;
என் மனம் சோர்ந்து போகும் நேரங்களில்,
உன் வார்த்தைகளே எனக்கு ஆறுதலாகின்றன.
நீ இல்லாத வீடு வீடாக இருந்தாலும்,
உன் பாசம் இல்லாத வெற்றிடம்
இன்றும் நிரம்பாத காயமாகவே உள்ளது.
எத்தனை உறவுகள் சூழ்ந்திருந்தாலும்,
"என் பிள்ளை" என்று அழைக்கும்
அந்த ஓர் குரலுக்காக
இதயம் இன்னும் ஏங்குகிறது

உங்கள் ஆத்மா சாநிதிபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos