10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், இணுவிலை வசிப்பிடமாகவும், தற்போது பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை கண்மணிஅம்மா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள் பத்து கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்!
உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும் எங்களை ஒவ்வொரு
பொழுதும் ஏங்க வைக்கின்றது அம்மா
உயிரை தந்து உடலில் சுமந்து
உலகில் வாழ உருவம் தந்த
தெய்வம் நீயம்மா!
காலங்கள் தான் போனதம்மா
உனைப் பிரிந்த வேதனை
இன்னமும் குறையவில்லையம்மா
உன் உடல் தான் மறைந்ததம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்