யாழ். வேலணை மேற்கு சிற்பனை 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும், கைதடியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை கணேசலிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.
31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!
அன்று எங்களது துன்பம் நீக்க
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய் எம்முடனே!
எமக்காகவே வாழ்ந்த எம் குலக்கொழுந்தே!
கருணையின் வடிவமே பண்பின் சிகரமே
உனது அன்பாலும் அரவணைப்பாலும்
உனது நித்திய சிரிப்பாலும் அடுத்தவர்களிற்கு கூறும்
ஆறுதல் வார்த்தைகளாலும் அனைவரையும் கவர்ந்தீரே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட அன்னாரின் மரணச்செய்திகேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும் தொலை பேசி ஊடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும் மலர்வளையங்கள், மலர்மாலைகள் அணிவித்து ஆறுதல் கூறிய அனைத்து உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.