Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 28 DEC 1937
மறைவு 25 DEC 2020
அமரர் செல்லத்துரை கணேசலிங்கம் (ராசாம்மான்)
வயது 82
அமரர் செல்லத்துரை கணேசலிங்கம் 1937 - 2020 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணை மேற்கு சிற்பனை 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும், கைதடியை  தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை கணேசலிங்கம் அவர்கள் 25-12-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, பூரணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மீனாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

வேல்வேந்தன்(லண்டன்), அனுச்செல்வன்(இலங்கை), சந்திரிகா(சுவிஸ்), சசிகலா(ஜேர்மனி), சிவகலா(இலங்கை), றசிகலா(லண்டன்), ஜெயகாந்தன்(ஜெய் நியூஸ்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கார்த்திகேசு, அம்பலவாணர்(கனடா), செல்வநாயகி(கனடா), காலஞ்சென்ற சபானாதன்(செவ்வந்தி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஸ்ரீறிராதா(லண்டன்), கௌசலா(ஆசிரியை- யா/கைதடி நாவற்குழி மகா வித்தியாலயம்), ரெட்ணேஸ்வரன்(சுவிஸ்), சிவகுமார்(ஜேர்மனி), செல்வானந்தன்(இலங்கை), ஸ்ரீபதி(லண்டன்), பத்மசிறி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற சகுந்தலாதேவி, ரதிதேவி(கனடா), காலஞ்சென்றவர்களான நிற்குணசிங்கம், சொர்ணேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான ராசலட்சுமி, புனிதவதி, சாந்தலிங்கம் மற்றும் சண்முகலிங்கம்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

அபினாஸ், ஆகாஷ், ஆதேஷ், கஷ்வினியா, அரவிந்தன், அனோஜன், அருந்தா, இனியா, சகானா, ஜகினி, ஜாதவி, கேசகி, சுவேதா, வருணன், சுஜிதா, சஜிதா, சகிதா, ஜெய், அபிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.     

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்