Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 09 NOV 1952
இறப்பு 15 MAR 2023
அமரர் செல்வதுரை செந்தில்மணி
BSc, M.Ed, S.L.E.A.S, PGDE, முன்னாள் ஆசிரியர் சாவகச்சேரி இந்துக்கல்லூரி, முன்னாள் பிரதி அதிபர் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை
வயது 70
அமரர் செல்வதுரை செந்தில்மணி 1952 - 2023 நுணாவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

திதி: 03-03-2024

யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வதுரை செந்தில்மணி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

இதயம் இத்துயர் சுமந்து ஓராண்டு
ஆனாலும் நித்தம் உனை
நினைத்தே நிம்மதி இழக்கின்றேன்
ஓராண்டு என்ன நூறாண்டே ஆனாலும்
கண்விட்டு அகலுமோ என் கண்ணனின் விம்பம்!

தூக்கமில்லா இரவுகளை எங்களுக்குத்
தந்துவிட்டு நொடிப்பொழுதில் எம்மை
மறந்து துயில் கொள்ளப் போனதெங்கே

மொட்டாகி பூவாகி காயாகி கனியாகும்
வேளையில் காத்திருந்து படைத்தவன்
பழி தீர்த்தானோ ?

எங்களை தவிக்க விட்டு
நீர் தூரமாய் சென்றதென்ன?
எங்கள் முகம் காண
வருவாயா ஓர் கணமே?

பிறந்து விட்டோம் இம்மண்ணில்
இறுதிவரை வாழ்வோம் நீ
விட்டுச் சென்ற நீங்காத நினைவுகளோடு... !

தகவல்: மனைவி, பிள்ளைகள்