என்ன குறை நீர் வைத்தீர் எமக்கிந்த வாழ்வினிலே இந்த குறை நீரில்லை இனியெம் வாழ்விலென்று சொல்லி அறையுது சோகம் ஒவ்வொரு கணப் பொழுதும், விம்முகின்ற எம் துயர் விளம்ப ஒரு வகையின்றி செய்து இரண்டாண்டு பறந்தது! நீர் இல்லாத குறை எமை எப்பொழுதும் எரித்திட விழிநீர் வற்றா, உம் நினைவும் வற்றா ! புது செடிகளும் கொடிகளும் மலர்களும் இக்குடும்ப வனத்தில் தளிர்க்கின்றன, அடி வேரான உம் நினைவுகளும் வழிகாட்டலும் அடியொற்றி வரும் எம்முடனே!! அம்மாவுக்கு அம்மாவாய் அப்பாவுக்கு அப்பாவாய் ஆசானுக்கு ஆசானாய் அரவணைத்த அம்மாவாய் பேறு பெற்ற எம் மகிழ்வில் பேயின் கண்கள் பட்டது கூறு போட்டு போனான் காலன் கொடுந்துயர் தந்து ஆண்டு இரண்டானது வீடு பெற்று போனீர் விடை பெற்று விண்ணேகி கூடியங்கு கொண்டாட கொண்டவனும் பெற்றவனும் வாரியெடுத்தும்மை வடிவாக இருத்தி வைப்பர் அவர் தேடிப் பார்த்திருக்கிறோம் மீண்டும் உமை சந்திக்க மிகு காலமாகாது காண் ! வருந்தியழைத்தாலும் திரும்பி வரவியலா தொலைவு பொருந்தி போனீர் மனமுற்று எம் உறவே இருந்து எம் சீர் பார்த்தது போதுமென்று நினைந்து கருதி வெளியேறினீரோ கனவாழ்வு போதுமென்று? இருப்பதும் இறப்பதும் இறை தந்த விதியென்று மனம் பொறுத்து காத்திருக்கிறோம் கண்ணீர் அஞ்சலிகளூடே