Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 31 MAY 1947
இறப்பு 10 MAR 2023
அமரர் செல்லப்பா பரஞ்சோதிநாதன்
முன்னாள் சாவகச்சேரி நகரசபை ஊழியர்
வயது 75
அமரர் செல்லப்பா பரஞ்சோதிநாதன் 1947 - 2023 நுணாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நுணாவில் மேற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லப்பா பரஞ்சோதிநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.  

எங்கள் குடும்ப விளக்காய்
எமக்கு நல்வழி காட்டி
உறுதுணையாக இருந்த நீங்கள்
இப்போது எம்முடன் இல்லை

காலச்சுழற்சியில் ஈராண்டு
கடந்து போனாலும் இன்னும்
எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
நித்தம் நாம் இங்கு தவிக்கின்றோம்
நீங்கள் இல்லாத துயரம்
வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை!

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ என்பார்கள்
அது எமது அறிவுக்குத் தெரிகிறது
ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே!

காலத்தின் சக்கரங்கள் கடுகதியில்
சென்றாலும் கடந்து வந்த பாதையிலே
நினைவலைகள் தொடரட்டும்

என்றும் உங்கள் ஆன்மா சாந்தி பெற
இறைவனை வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

Photos