யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா ஜெயசீலன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நிகழ்வு 11-05-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் வீட்டுக்கிருத்தியம் செய்ய இருப்பதால் தாங்களும் அன்னாரது ஆத்ம சாந்தி பிரார்த்தினையில் பங்குகொண்டு தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
7ம் வட்டாரம்,
சிவநகர்,
புதுக்குடியிருப்பு.
Our deepest sympathies and our prayers to all the family members