
யாழ். நீர்வேலி கரந்தனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Pforzheim ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லப்பா சுந்தரலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆகிவிட்டது
ஆறவில்லை எம் துயரம்!
நிஜத்தில் நீங்கள் எம்முடன் இன்றில்லை
நினைவில் தினமும் எம்முடன் வாழ்கின்றீர்கள்!
சோதனைகள் வரும்போதெல்லாம்
சோர்ந்துவிடாதீர்கள் என்று கூறி
சொன்ன வார்த்தைகள் எங்கள் முன்னே
சொர்க்கத்தை போல் காதினில்
ஒலித்துக்கொண்டே இருக்கின்றது!
பாசத்தின் பிறப்பிடமாய் பாரினிலே !
நேசத்துடன் எங்களை ஆளாக்கி
நேர்மையுடன் வாழ்ந்தீர்களே அப்பா!
எங்களுக்கு வாழ வழிகாட்டிய எங்கள் அப்பா
எம் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டு
எம்மை விட்டு போக உங்களுக்கு
எப்படி மனசு வந்தது அப்பா?
எமக்காக ஒரு முறை வாருங்கள் அப்பா!
இறைவன் போல எமைக் காத்து
பல கதைகள் எமக்கு சொல்லி
பல வகையான இனிப்புகள் வாங்கித் தந்து
பக்குவமாய் நாம் வாழ வழிகாட்டிய அன்பு தாத்தாவே!
வாருங்கள் ஆசையோடு அணைப்பதற்கு
உங்களை நினைத்து நினைத்து இந்த உலகத்தில்
உயிராய் உங்களை தேடுகின்றோம்
எம் இதயம் தொட்ட எங்கள் அன்பு தெய்வமே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
Rest in peace friend, we know you are in a better place and one day we shall meet again.