1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லப்பா செல்வராசா
ஓய்வுபெற்ற முன்னாள் அதிபர் சின்னத்தம்பி வித்தியாலயம் அல்வாய், சமாதான நீதவான், முன்னாள் தலைவர் கட்டைவேலி பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் நெல்லியடி, முன்னாள் மத்தியஸ்தசபை உறுப்பினர், சமூக சேவையாளர், முன்னாள் கணபதி அறக்கட்டளை பணிப்பாளர்.
வயது 88
அமரர் செல்லப்பா செல்வராசா
1936 -
2024
அல்வாய் தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி:28/11/2025
யாழ். வடமராட்சி அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லப்பா செல்வராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு என்னும் விழுதினை
ஆலமரம் போல் ஊன்றி
பண்பு என்னும் கதிர்களை
பகலவன் போல் பரப்பி
இல்லறம் என்னும் இன்பத்தை
இமை போல் காத்து நின்றவரே
நீங்கள் பிரிந்து
ஒரு வருடம் ஓடிப்போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம் அப்பா
ஓராண்டு கடந்தும்
உங்கள் நினைவுகள் எமை
தினமும் வாட்டி வதைக்கின்றது அப்பா
நீங்கள் இல்லாத உலகம்
நிம்மதி இழந்து தவிக்க
போகும் பாதைகள் புரியாமல்
நித்தமும் நினைக்கையில்
கண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்து
பாயிது ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள்
நினைவுகளும், நிகழ்வுகளும்..
உங்களின் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்