Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 MAY 1936
இறப்பு 08 DEC 2024
திரு செல்லப்பா செல்வராசா
ஓய்வுபெற்ற முன்னாள் அதிபர் சின்னத்தம்பி வித்தியாலயம் அல்வாய், சமாதான நீதவான், முன்னாள் தலைவர் கட்டைவேலி பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் நெல்லியடி, தற்போதைய மத்தியஸ்தசபை உறுப்பினரும், சமூக சேவையாளரும்
வயது 88
திரு செல்லப்பா செல்வராசா 1936 - 2024 அல்வாய் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வடமராட்சி அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா செல்வராசா அவர்கள் 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா(ஆசிரியர்) செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

மணிச்செல்வன்(சுவிஸ்), மணிச்செல்வி(இலங்கை), சிவச்செல்வன்(அவுஸ்திரேலியா), சுபச்செல்வன்(இலங்கை), ஞானச்செல்வன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தயாபரன், தயாமதி, சுபாசினி, செந்திலி, கார்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, தவமணி, துரைராசா(அதிபர்), தங்கராசா(அதிபர்), தயாமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான J.S நல்லதம்பி(ஓய்வுபெற்ற அதிபர்), மனோன்மணி(ஆசிரியை), சுப்பிரமணியம், பாக்கியம், கனகம்மா, அருந்தவநாயகி மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விபுஜா, வினுஜா, டிலக்‌சனா, சோபிஷன், வினுஜன், தக்‌ஷன், டிலக்‌ஷன், சுலக்‌ஷன், திலக்‌ஷன், அனுக்‌ஷன், கிருத்திகன், விபூசனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-12-2024 திங்கட்கிழமை முதல் 11-12-2024 புதன்கிழமை வரை மு.ப 09:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை 12-12-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து அல்வாய் மேற்கு பங்குவேம்படி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மணிச்செல்வன் - மகன்
மணிச்செல்வி - மகள்
தயாபரன் - மருமகன்
சிவச்செல்வன் - மகன்
சுபச்செல்வன் - மகன்
ஞானச்செல்வன் - மகன்

Photos

Notices