யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லப்பா இராசையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 02-06-2024
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணிபோல்
எம்மை காத்த அன்புத்தெய்வமே
ஆறிடுமோ எங்கள் துயரம்
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குல விளக்கே!
உங்களையே உலகமென எண்ணி உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
நீங்கள் எம்மைவிட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் ஆசைமுகம் என் நெஞ்சில் நிலைத்திருக்கும்
உங்களோடு வாழ்ந்த நாட்கள் திரும்பி வராதா
என்று எண்ணித் துடிக்கிறோம்.
நாம் வாழும் வரை உங்கள்
நினைவுடன் வாழ்ந்திடுவோம்!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!