யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா இராசையா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா லட்சுமி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராசையா சரஸ்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, மீனாட்சி, குமாரவேலு, பார்வதி, பொன்னு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இரவிச்சந்திரன், சியாமளா, மஞ்சுளா, பரிமளா, ஜெயச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மாலினி, விவேகானந்தன், பாலகுமாரன், கஜபதிபாலன், லாவண்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருஷாந்தி, சஞ்சயன், எழில்வதனன், அர்ச்சனா, அருவிகா, அருவின், அஷ்விகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆதிரன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உருத்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
அன்னாரின் பிரிவுச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும் எமக்கு ஆறுதல் கூறிய உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியைகள் 12-06-2023 திங்கட்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்று பின்னர் 14-06-2023 புதன்கிழமை அன்று வீட்டுக் கிருத்திய கிரியைகளும், ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் அதனைத்தொடர்ந்து மதியபோசனவிருந்தும் அவரது இல்லத்தில் நடைபெறும் இதில் அனைவரும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் அன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.
Funeral Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details