யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா பொன்னுத்துரை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.
31 நாள் அல்ல எத்தனை எத்தனை ஆண்டுகள்
ஓடி மறைந்தாலும் உங்கள் நினைவுகள்
எங்கள் கண்முன்னே நிழலாடுகிறது
உங்கள் சிரித்த முகம்
எங்கள் முன்னே எந்நாளும்
உயிர்வாழும் அப்பா எம்மை
எல்லாம் அன்பாய் அரவணைத்து
பண்பால் வழி நடத்திய அந்த நாட்கள்
எம்மை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்
மறையாது அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
என்றும் மறவாத உங்கள் நினைவுகளுடன்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை எதிர்வரும் 02-01-2023 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்திலும், 31ம் நாள் நினைவஞ்சலி 07-01-2023 சனிக்கிழமை அன்று Scarborough Event Centre இல் நடைபெறும். அதனைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கிறோம்.