யாழ். மறவன்புலவைப் பிறப்பிடமாகவும், நாவற்குழி, கச்சேரி, நல்லூர், திருகோணமலை வித்தியாலய வீதி, பரந்தன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா திருச்செல்வம் அவர்கள் 27-08-2021 வெள்ளிக்கிழமை அன்று பரந்தனில் உள்ள அவரது கனிஷ்ட புத்திரனின் வீட்டில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருளம்பலம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும், காலஞ்சென்ற நமசிவாயம், செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற நமசிவாயம் திருச்செல்வம் அவர்களின் அன்புத் துணைவியும்,
சிவச்செல்வன்(பிரான்ஸ்), கேதீஸ்வரன்(பிரான்ஸ்), பஞ்சரட்ணம் கெளரி(திருகோணமலை), இரவிக்குமார்(நோர்வே), நவநீதன்(லண்டன்), மகாமூர்த்தி(பரந்தன்- நீர்பாசனத் திணைக்களம், கிளிநொச்சி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவச்செல்வன் ரோகினி, கேதீஸ்வரன் டாஜி, கந்தையா பஞ்சரட்ணம், இரவிக்குமார் ஏஞ்சலின், நவநீதன் கலைவாணி, மகாமூர்த்தி அகிலா(மக்கள் வங்கி, கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மதுஷா சிவச்செல்வன்(பொறியியலாளர்), ஈழமன் கேதீஸ்வரன்(பொறியியலாளர்), திரோசன் தீபிகா(பல் வைத்தியர்), அஜந்திகா பஞ்சரட்ணம், பஞ்சரட்ணம் தீபதர்ஷன், மெலானி இரவிக்குமார்(பல் வைத்தியர்), பிரணவன் நவநீதன்(பொறியியலாளர்), கார்த்திகன் நவநீதன், நிருஷன் நவநீதன், ஆதிஷ் மகாமூர்த்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி மற்றும் இராசலட்சுமி(குஞ்சு), செல்வராசா, மங்கயற்கரசி(தேவி), இந்திராணி(கிளி) மற்றும் காலஞ்சென்ற அல்லிராணி(ராணி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற இராசேந்திரம், சிவானந்தம் மற்றும் ராமச்சந்திரன், சரஸ்வதி, மனோகரன், காலஞ்சென்ற திரெளபவதிதேவி, தில்லைநடராஜன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற அன்னலிங்கம் மற்றும் சிவமலர் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் தகனக்கிரியைகள் 29-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில்
நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Lankasriல் உள்ள மரண அறிவித்தலை பார்த்தவுடன் பேரதிர்ச்சியடைந்தேன் இவாவுடன் பழக சில சந்தர்ப்பங்கள் கிடைத்தாலும் என் மனதில் இடம் பிடித்த விடயங்களில் இவர்களின் நேர்மையான பேச்சும் ஒன்றாகும். என்றும்...