யாழ். காரைநகர் கரப்பிட்டியந்தனையைப் பிறப்பிடமாகவும், பாலாவோடை மற்றும் கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா நடராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும்பாது
காத்த எங்கள் அன்பு
அன்னையே எங்கள் அனைவரையும்
விட்டுப் பிரிந்தது தான் ஏனோ
மென்மையான உள்ளம் கொண்டு
உண்மையான அன்பு தந்து
ஆசையாக எமை வளர்த்து
அறிவூட்டிய அன்பு அன்னையே
ஓர் ஆண்டு
ஆனதம்மா - ஆனால் உங்கள்
நிழல்கள் அழியவில்லை
ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்
உன்னைப்போல் யாரும் இல்லை
அன்னையே நம் உள்ளத்தின்
உள்ளே வாழும் உன்னதமான
அன்னையே - உங்கள் உடல்
மட்டும்தான் பிரிந்து போனது
உயிர் எம்முடன் தான் இருக்கிறது
எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் உங்கள் பாசத்திற்கு
நாம் பட்ட கடன் தீராதம்மா.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஆழ்ந்த இரங்கல் அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம் சந்திரன் குடும்பம் (C.T.B) Vavuniya