
யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம் நடேசு அவர்கள் 03-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மாரிமுத்து மற்றும் சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், சின்னவர் பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சின்னவர் நடேசு அவர்களின் பாசமிகு மனைவியும்,
துரைஜானி, காலஞ்சென்ற முருகவேல் மற்றும் கமலாம்பிகை, சடகோபன்(கோபு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் பூமாதேவி, குணரத்தினம், சோமசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தங்கம், ஆறுமுகம், ஜெகதீசன், சின்னப்பிள்ளை, துளசிஅம்மா மற்றும் இலட்சுமியார், சரவணமுத்து, கோடீஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வைரவநாதன், மகேந்திரன், வாணி, செல்லத்துரை, துரைசிங்கம், குஞ்சு, இராமலிங்கம், தேவன், நல்லம்மா, குண்டுமணி, பொம்மை, இரத்தினம், பூபதி, குமார், செல்வம், சக்திவேல், சகுந்தளை, இராசன், குணா, கிரீசன், மயூரன், நிதர்சன், சிவம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விக்கினராஜா, பிரவனராஜா, கெளசீகி, பாசினி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
விநாயகமூர்த்தி, கருணாகரன், வினோபாஜி, ரகி, பாமினி, கவிதா, றோசி, றெசித்தா, அஞ்சி, காஞ்சி, பிரியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பானுயன், பவதாரனி, விசாலினி, ஹரிஸ், விணுஸ், லதுஸ், மிலா, மிதுஸ், ஜான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடி நிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
"குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே உடம்பொ டுயிரிடை நட்பு" என் தாயின் கருவறையில் நான் உதித்த நாள் தொட்டு நாம் வளரும் காலத்தில் கல்வி கேள்விகளில் சிறப்புற்றோங்க எம்மை நெறிப்படுத்திய என்...