2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம் பாலாவி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லக்கண்டு கனகரட்ணம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமே
பாசத்தின் பிறப்பிடமே
எங்கள் அம்மாவே!
எங்கு சென்றீர் எம்மை விட்டு!
அன்று நீங்கள் தாயாக இருந்தீர்கள்
இன்றோ தெய்வமாகி விட்டீர்கள்
ஆதலால் கைகள் தொழுகின்றன
எம் கண்கள் அழுகின்றன!
அழுத கண்கள் வரண்டு
ஈராண்டு போச்சு
தாயே உங்கள் முகம்
பார்க்காமல் கலங்கி நின்றோம்
அன்றும், இன்றும் உங்கள்
இழப்பின் வலி
நெஞ்சுக்குள் படபடக்குது
உங்கள் உடல் மட்டும் தான் பிரிந்து போனது
ஆனால் முழு நினைவாக
உயிர் எம்முடன் தான் இருக்குதம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்.....
தகவல்:
குடும்பத்தினர்