3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்லையா தில்லைநாதன்
(J.p.)
முன்னாள் பிரபல வர்த்தகர்- நீர்கொழும்பு, அகில இலங்கை சமாதான நீதவான், சைவத்திருமுறை அடியார் சங்கம மூத்த உறுப்பினர்- நீர்கொழும்பு
வயது 87

அமரர் செல்லையா தில்லைநாதன்
1929 -
2016
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 11ம் வட்டாரம், நீர்கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா தில்லைநாதன் அவர்களிற்கு எமது ஆறாத்துயருடன் கூடிய 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
விண்ணுலக வாழ்வில் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி
எங்கள் அன்புத் தெய்வமே
நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
மூன்றாண்டு சென்றபோதும்
எங்கள் இதயமெனும் கோவிலில்
நிதமும் வாழ்கின்றீர்கள் ஐயா...
கண்களை மூடி நாங்கள் தூங்க
கனவில் உங்கள் முகம் தெரிகிறதே
பாசம் காட்டும் உங்கள் முகத்தை
இனி நாம் எங்கே காண்போம் ஐயா...
ஆன்மா என்றென்றும் அழியாது
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
உங்கள் ஆத்மா எல்லாம் வல்ல சிவகாமி சமதே தில்லை நடராஜ பெருமானின் பாதார விந்தங்களில் நித்திய சாந்தி பெற உங்கள் நினைவுகளைச் சுமந்து கண்ணீருடன் பிரார்த்திக்கின்றோம்
தகவல்:
மனைவி மற்றும் குடும்பத்தினர்