

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 11ம் வட்டாரம், நீர்கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா தில்லைநாதன் அவர்களிற்கு எமது ஆறாத்துயருடன் கூடிய 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
விதி என்னும் இரண்டு எழுத்து உங்களை
வேரோடு சாய்த்து ஆண்டுகள் இரண்டு ஆனதே ஐயா ...!
ஆறுமோ எங்கள் துயரம் மாறுமோ உங்கள் நினைவு ...!
கடந்து விட்ட இரண்டு ஆண்டுகளில் கலங்காத நாளில்லை ......
காலத்தின் கோலம் எங்களிடமிருந்து பிரித்து விட்டாலும்
எந்நாளும் எம்மனதில் காவியமாய் வாழ்கின்றீர்கள் ஐயா ..!
கனவாகிப் போகாதோ நீங்கள் மண்ணை விட்டு
விண்ணுலகு சென்றது என்று ...???
தினம் தினம் பிரிவுத் துயரால் விழி நீரில் வலி சுமந்த
நினைவுகளோடு வாழ்கின்றோம் ஐயா ..!
"ஆன்மா என்றென்றும்அழியாது"
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
உங்கள் ஆன்மா எல்லாம் வல்ல சிவகாமிசமேத தில்லைநடராஜப் பெருமானின் பாதாரவிந்தங்களில் நித்திய சாந்தி பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
மனைவி மற்றும் குடும்பத்தினர்