Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 AUG 1936
இறப்பு 14 APR 2018
அமரர் செல்லையா சோமசுந்தரம் 1936 - 2018 மீசாலை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநோச்சி இராமநாதபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா சோமசுந்தரம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.   

எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
 உங்கள் அரவணைப்பில்
 இல்லறம் வாழ்ந்திருந்தோம்
 இன்று நாம் தவிக்கின்றோம்
 நீங்கள் இன்றி ஏங்குகின்றோம்

உங்கள் பாசத்திற்காய் ஆறாத்துயருடன்
 அன்பையும் பாசத்தையும் காட்டி
 உங்கள் கண்களுக்குள் வைத்து
 வழிகாட்டி வளர்த்தீர்கள்..!

ஆயிரம் உறவுகள் கிடைத்தாலும்
 வாழ்நாள் முழுவதும் உங்களின்
 உறவைப் போன்று
ஒரு உறவைப் பெறவே முடியாது.

இந்த உலகில் யாருமே
தரமுடியாத - மிகப் பெரிய விலை
 மதிப்பு இல்லாத - பொக்கிஷம் உங்களின் அன்பு..!

நீங்கள் கூறிய வார்த்தைகள்
 என்றும் ஒலித்துக் கொண்டு
இருக்கின்றதுஅப்பாவே..!

எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
 உங்கள் நினைவு எமை விட்டு அகலாது
 நாங்கள் உங்களை மறந்தால்
 தானே நினைப்பதற்கு நினைவே
 என்றும் நீங்கள் தான் வானுலகம் சென்றாலும்
 எம் வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் அப்பாவே!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்