யாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா சமளங்குளம் கோவில்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட பொன்னர் செல்லையா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா உங்கள் குரல் கேட்டு
ஆண்டுகள் ஏழு ஓடிப் போச்சு.
அருகில் இருந்து உங்களுடன் வாழ்ந்த
காலமெல்லாம்
கனாக் காட்சியாக மாறிப்போச்சு
ஆண்டுகள் ஏழு சென்றாலும்
அணையவில்லை எங்கள் துயரம்
அவ்வப்போது ஆங்காங்கே தோன்றி மறையுதே
கோவத்தில் கொதித்து, கண்டிப்பை
காட்டும்பொழுதெல்லாம் நாம் கடும் கோபம்
கொண்டு பல வேறுப்புச்செயல்களை செய்தோம்;
ஆனால் நீங்கல் வெய்யிலில் காய்ந்தும், மழையில்
நனைந்தும் எமக்கு பல
சிறப்புக்களைச் செய்து மறைந்திர்கள்.
நீங்கள் இருக்கும் வரை
உங்கள் கருணையை நாம் அறியோம்.
உங்களுடன் வாழ்ந்த காலங்கள் நெஞ்சில்
என்னேன்றும் பசுமையாக நிலைத்து நிற்கும்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திகின்றோம்.
🤍🕊ஓம் சாந்தி சாந்தி சாந்தி