யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா மரியநாயகம் ஞானராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்பின் அப்பா
அழியாத ஓவியமே
அழைத்து விட்டாரோ
ஆண்டவர் உம்மை தம்முடனே
அப்பா என்று நாம் அழைக்க
நீங்களில்லாத துயரம்
பாசமாய் எங்களை வளர்த்த
பாசத்தின் பிறப்பிடமே
பார்க்குமிடமெல்லாம் எங்கள்
பார்வையுள் தெரிகின்றீர்கள்
இன்பமாய் நாம் வாழ
உம் உதிரம் தந்தவரே
இனியவரே உங்கள் திருவதனம்
எப்படி நாம் மறப்போம்
மறக்கவும் முயல்வோமோ?
நீங்கள் இல்லா குறைதீர்க்க
பாரினிலே எமக்கு யாருண்டு?
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
உங்கள் பிள்ளைகளாக பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் அப்பா
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் நினைவுகள் பசுமையாக
எம் மனதில் என்றும் நிலைத்திருக்கும்
இறைபதம் தனில் இளைப்பாறிடுங்கள் அப்பா
உங்கள் பிரிவால் துயருறும்
பாசமிகு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும் தொலைபேசியுடாகவும், மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதலும் அனுதாபமும் கூறிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மற்றும் அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகளுக்கும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். தற்கால சுழ்நிலை காரணமாக அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலியை எம் அன்பு உறவுகளோடு இணைந்து செய்ய முடியாததையிட்டு மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
Thank You Message
On behalf of our family we would like to express our heartfelt gratitude to all those who expressed their condolences through telephone, email or online following the announcement of our father's death. We especially thank the priests and sisters who held masses in his name, those who came to visit or offered solace during the difficult grieving period and finally, friends and relatives who continued to assist our family following his death.
Unfortunately, COVID has made it difficult for us to commemorate our father's 1 month anniversary of his passing, with abundant love from close relatives and friends. But we hope you can at least say a prayer for the souls of the departed for our father.
Thank you
Our heartfelt condolence. Indran i& Gune