யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லையா மரியநாயகம் ஞானராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
இரத்தத்தை வியர்வையாக்கி
அல்லும் பகலும் அயராது உழைத்து
எங்கள் வாழ்விற்கு ஒளி கொடுத்த எம் தந்தையே...
கைப்பிடித்த நாள் முதலாய் கண்னை
இமைகாப்பது போல் எம்மை காத்து வந்தீரே!
நினைக்கும் போது எல்லாம்
உங்கள் நினைவோடு வாடுகின்றேன்
பெற்ற பிள்ளைகள் எங்கள் நல்வாழ்விற்காய்
பெரும்பாடுபட்ட அன்பு அப்பாவே...
அன்பாக கல்வியூட்டி, வாழ வழிகாட்டி,
தக்கதுணை தேடி தரணியிலே வாழ
வைத்தவரே உங்கள் ஒழுக்கம், நற்பண்புகள்,
மதிப்புக்கள் எல்லாம்
எங்கள் வாழ்வில் என்றென்றும்
வழிகாட்டியாக இருக்கும் அப்பா
ஐந்து என்ன ஐந்துயுகம் கழிந்தாலும்
உங்கள் பிரிவை எங்களால் தாங்கமுடியாது
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
உங்கள் பிரிவால் துயருறும்
மனைவி,
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள் மற்றும்
உற்றார், உறவினர்கள்..!
Our heartfelt condolence. Indran i& Gune