1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்லையா ஞானசுந்தரம்
வயது 88
Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி: 08-06-2025
மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். சண்டிலிப்பாய் மட்டுவில், கிளிநொச்சி, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லையா ஞானசுந்தரம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பும் பண்பும் அறிவும் நிறைந்த
புன்னகையின் புகலிடமே உம்மருகில்
நாம் வாழும் பாக்கியத்தை
இழந்துவிட்டோம் அப்பா!
பாசத்தின் திருவுருவாய்
பண்பின் உறைவிடமாய்
எங்களுக்கெல்லாம் அன்புக் காட்டி
அரவணைத்த எங்கள் அன்புத் தெய்வமே
நீங்கள் பிரிந்து ஒரு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியவில்லை அப்பா!
உங்கள் நினைவலைகள் எங்கள்
கண்முன்னே நிழலாடுகிறதே!
ஓராண்டு என்ன எத்தனை ஆண்டுகள்
ஓடி மறைந்தாலும் உங்கள் அன்பும் பாசமும்
என்றும் எம் நினைவை விட்டு அகலாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எங்கள் கண்ணீர்ப் பூக்களை
காணிக்கையாக்குகின்றோம்!!
தகவல்:
குடும்பத்தினர்