5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை வேணுகோபால் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் இருப்பிடமே பாசத்தின்
உறைவிடமே எங்கள் அப்பா
ஆசையாய் இருக்குதப்பா
சிரித்த உங்கள் முகம் பார்க்க
வந்திட மாட்டீர்களா?
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
ஐந்து வருடம் விரைந்தே போனதப்பா
நீங்கள் எங்களுடன் வாழ்வதாய்
நினைத்தே நாம் வாழ்கின்றோம்-
ஆனாலும் உங்கள் முகம் பார்க்க
துடிக்கும் வேளையில்
நெஞ்சில் இரத்தம் சுண்டுதப்பா
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
எம் நெஞ்சை விட்டு அகலாது
உங்கள் நினைவுகள்
இதயதுடிப்பு உள்ளவரை
எங்கள் இதய தீபம் நீங்கள் அப்பா!
ஆற்பெரும் துயர் தந்து
நீர் பிரிந்து ஐந்தாண்டு ஆகியும்
உம் ஒவ்வொரு அசைவும்
எம்முடன் இருக்குமென
மனசாந்தி கொண்டு உம் பாதத்திற்கு
மலர் சாந்தி செலுத்துகின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
RIP