Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 29 JUN 1958
இறப்பு 11 SEP 2025
அமரர் செல்லத்துரை தனபாலன் (நகுலன்)
வயது 67
அமரர் செல்லத்துரை தனபாலன் 1958 - 2025 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Rome, ஜேர்மனி Dortmund ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை தனபாலன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று சென்றாலும்
அழியவில்லை எம் சோகம்
மாறாது எம் துயரம்
மறையாது உங்கள் நினைவு!!

உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?

நீங்கள் பிரிந்து ஒரு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.

அன்பான அப்பாவே!
உங்கள் அன்புச் சிறைக்குள் அடைபட்டு
இன்புற்று இருந்த இனிய வசந்த காலம்
எங்கள் இதயத்துள் இன்பவலியாய்
எமக்குள்ளே ஆன்மாவை அச்சுறுத்த
ஏன்? எங்கே? பிரிந்து போனீர்கள்!

நீ இல்லாத நாமும்
நிலா இல்லாத வானம்!
நம் வீட்டு சூரியன் அழுகிறது
துடைக்க நினைக்கும் விரல்கள் எரிகிறது

தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
  

தகவல்: மனைவி - சகோதரர்கள்