Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 FEB 1960
இறப்பு 13 AUG 2022
அமரர் செல்வராணி சோமசுந்தரம் (செல்வம்)
வயது 62
அமரர் செல்வராணி சோமசுந்தரம் 1960 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

திதி: 02-08-2023

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Coventry ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வராணி சோமசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

கடவுள் தந்த உயிர் என்று சொல்லவா...
இல்லை, கடவுளிலும் உயர் என்று சொல்லவா...
நிகரில்லா எங்கள் சுவாசம் நீயே...
 எங்கள் மனம் தினம் ஏங்கும் அன்புத் தாயே...
சிந்திய கண்ணில் சிதறியது உங்கள் நினைவுகள்...
சத்தம் இழந்து சோகமாய் உம் வளர்ப்புக்கள்...
பந்தம் இருந்தும் பாராட்ட பாசமாய் நீங்கள் இல்லை,

அந்தரிக்கும் எமக்கு ஆறுதலாய் உங்கள் வார்தையுமில்லை...
வண்ணத்தில் வடிவத்தில் வையத்தில் இல்லை-
எம் எண்ணத்தில், ஏக்கத்தில், தூக்கத்திலும் நீ தான் அம்மா... ️
ஓராண்டு நகர்ந்தாலும் நம்மை விட்டு அகலாது உங்கள் நினைவு...
நினைவுகள் வருகையில் நிலைகுலைந்து போகின்றோம் அம்மா...
 உங்களை நினைக்காத நொடிகளில்லை...
விண்ணோடு சென்றாலும் விலை பேச முடியாத...
கண்ணோடு மணியாக கருத்தில் நீ இருப்பாயே அம்மா...️

தப்பென்ன சரியென்ன நிப்பாய் எம் பக்கம் தவறி
நீ போகும் போது நாம் இல்லையே உன் பக்கம்...
உன் கையால் அரவணைத்து உருவாக்கி
நீர் வாழ்வு - எமக்கு எண்ணத்தில் என்றும்
நீ தான் அணையா விளக்கு - எமக்கு...

ஆண்டுகள் பல சென்றாலும் என்றென்றும் ஓயாமல்
 துடிக்கும் உன் நினைவலைகள் அம்மா️...
உன்னை எவ்வடிவில் மறுமுறை காண்போம் இனி...
எல்லாம் மாயை விம்பம் ஆகி போனது ஏன்...
பெண்ணின் ஒட்டு மொத்த இலக்கணமாய்
பூலோகில் உன்னை படைத்தான் பிரம்மன்......

நீபெண்ணின் இலக்கணத்தையே மிஞ்சி
தெய்வத்திற்கான இலக்கணம் பெற்றதாலோ
என்னமோ மண்ணுலகில் இருந்து விண்ணுலகிற்கு
 ஈசன் உன்னை அழைத்துக் கொண்டான்...
நீங்கள் இல்லா விடினும் உங்களின் ஆசிர்வாதம்
 எங்களுடைய வாழ்க்கையை பிரகாசமாக
 வழி நடத்துகின்றது அம்மா ️...

உங்களின் ஆன்மா முடிவிலியானது எங்கள்
 இதயங்களில் குடியிருக்கும் நீங்கள் இறைவனின்
 அதிக அன்பை பெற்று சொர்க்க பூமியை
அடைந்து விட்டீர்கள் அம்மா...

உங்கள் ஆன்மா மனமகிழ்வோடு இறைவனிடம்
ஒன்றினைந்து தெய்வீக ஒளியை ஒளிரட்டும் அம்மா.....
உங்கள் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி...

தகவல்: கணவர்,பிள்ளைகள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices