


வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வமாகிவிட்ட எங்கள் விருப்பத்திற்குரிய அன்பு மைத்துனியே தங்களின் பிரிவை நினைக்கும் பொழுது அதைஎம்மனது ஏற்க மறுக்கிறது.ஏன்எனில் தங்களின் கலகலப்பான சிரிப்பும். கனிவான பேச்சும் அகமும் முகமும் மலர வரவேற்கும் பண்பும் எம் மனதை விட்டகலாது.நீங்கள் எங்கும் செல்லவில்லை.எம்முடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.இன்பத்திலும் துன்பத்திலும் வையகத்தில் மனிதன்.எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டிச் சென்றிருக்கிறீர்கள். தங்களின் இறுதிக்காலம் நோயுற்று சற்றே துன்பமானதாக அமைந்தாலும் அதுவும் இறைவன் தங்கள் மீது வைத்த அளப்பெரும் கருணை தான்.தங்களின் எச்சசொச்ச கர்மவினைகள் அனைத்தையும் அனுபவித்து முடித்துவிட்டு பிறவாத பேரின்ப நிலையுடன் தம்மை வந்து சேரரவேண்டுமென்பது இறைவன் விருப்பம் போலும். தாயே தங்களின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளில் அமைதி பெற வணங்குகின்றேன் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🙏🙏
கொழும்பு, வெள்ளவத்தை சீகல் தொடர்மாடி ஹம்டன் ஒழுங்கை 46ம் இவக்கத்தில் வசிக்கும் அனைத்துக் குடியிருப்பாளர்கள் சார்பாக எமது கண்ணீர் அஞ்சலி. அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்.