Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 18 MAR 1943
இறப்பு 30 JAN 2020
அமரர் சீனி நாகமணி
ஓய்வுபெற்ற தபால் ஊழியர் நேரியகுளம்
வயது 76
அமரர் சீனி நாகமணி 1943 - 2020 வவுனியா, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

வவுனியா அடப்பன் குளத்தைப் பிறப்பிடமாகவும், நேரியகுளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சீனி நாகமணி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!

அன்று எங்களது துன்பம் நீக்க
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய் எம்முடனே!
எமக்காகவே வாழ்ந்த எம் குலக்கொழுந்தே!

கருணையின் வடிவமே பண்பின் சிகரமே
உங்கள் அன்பாலும் அரவணைப்பாலும்
உங்கள் நித்திய சிரிப்பாலும் அடுத்தவர்களிற்கு கூறும்
ஆறுதல் வார்த்தைகளாலும் அனைவரையும் கவர்ந்தீரே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

30.01.2020 ல் ஆண்டவன் அடி சேர்ந்த எமது தந்தையாரின் மரணச் செய்தி கேட்டு தொலைபேசி மூலமாகவும், முகநூல் வழியாகவும், நேரடியாகவும் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மரணச் சடங்குகளிலும், இறுதிக்கிரிகைகளில் கலந்து கொண்டவர்களுக்கும் எமது குடும்பம் சார்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அத்தோடு தந்தையாரின் மரண அறிவித்தல்களை உலகறியச் செய்த லங்காசிறி நிறுவனத்தாருக்கும் நன்றிகள்.

அன்னாரின் சிவபதப்பேறு குறித்த அந்தியேட்டிக்கிரியைகள் 27-02-2020 வியாழக்கிழமை அன்று காலை கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 31 Jan, 2020