Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 JUL 1944
இறப்பு 07 MAR 2020
அமரர் செபஸ்ரி புஸ்பராணி 1944 - 2020 Vasavilan, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செபஸ்ரி புஸ்பராணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

விண்ணக வாழ்வின் முதலாம்
ஆண்டு நினைவஞ்சலி

நிஜம் என நினைத்தோம் எம் நிழலாகினாய் அம்மா
உம் பிரிவின் காரணங்கள் ஏனோ
உன் அன்புக்கு ஈடு இணை இல்லை தாயே
யாதுமாகி நின்றாய் எங்கள் இல்ல தலைவியாக
நீ இல்லை என்றார்கள் இக்கணமும் எம் மனம் ஏற்கவில்லை
எம் விழிகளின் கண்ணீரே விடையாக ...
உன் நினைவுகளின் சிறு துளிகள்

வயாவிளானில் பிறந்து துணைவியானாய்
புதுக்குடியிருப்பு மைந்தனுக்கு வெள்ளை உள்ளம் கொண்ட
உனக்கு கள்ளமில்லா கணவன் எங்கள் அப்பா
பார்ப்பவரெல்லாம் வணங்குமளவிற்கு
உன் தோற்றமும், செயல்களும் இருந்தது
மணவாழ்வின் அன்பு அடையாளங்களாய்
ஆசையாய் ஆறு செல்வங்களைப் பெற்றெடுத்தாய்

காலங்கள் கழிப்புடன் செல்லுகையில் கண்ணூறு பட்டதுவோ,
கலைந்தது உன் கோலம், காலனவன் வந்தான் எம் இல்ல வாசலில்
அப்பாவை இழந்தோம். எவர்  துணையுமில்லாமல் தவித்தோம்.
உன் குழந்தைகளுக்காக இழப்பின் கவலையை மறைத்தாய்
ஆனால் யாரும் இல்லாவேளையில் உன் கவலையை கொட்டி தீர்த்தாய்
இதெல்லாம் உனையறியாது கண்டவர்களின்  சாட்சிகள்.

பொறுப்புகளை கையிலெடுத்து  எதிர் நீச்சல் கொண்டாய்
உன்னுடைய மனத்துணிவாலும் இறைபக்தியாலும்
சவால்களை எதிர் கொண்டு பிள்ளைகளுடைய
எதிர்காலத்திற்காக அம்மாவாக அப்பாவாக உழைத்தாய்.
எங்களுக்கு வாழ்க்கைப்பாடத்தை புகட்டினாய்,
கல்வியில் வளர்த்து பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பினாய்,
நீயே எங்கள் வாழ்க்கைத்துணைகளையும் தேர்ந்து
எங்களை கரம் பிடித்து வைத்தாய்.
தந்தை இல்லாத பிள்ளைகள் என்ற எந்த குறையையும்
எங்கள் வாழ்க்கைத்தரத்தில்  நீ வைக்கவில்லை.
எடுத்த பொறுப்பை செவ்வனே செய்து முடித்த சிங்கபெண்ணம்மா நீ.

இன்றைய நிலைபோல் தன்பிள்ளைகளுக்கு மட்டும் அன்னையல்ல நீ
வரவே இல்லா நிலையிலும் வரவேற்பாய் அன்போடு எல்லோரையும்,
இதனாலோ போகுமிடமெல்லாம் அன்பு வரவேற்பு உனக்கு

கடவுளிடம் உண்மையான விசுவாசம் கொண்டாய் நீ
உன்னை ஜெருசலேம், ரோம், லூர்ட்ஸ், பாதுவா, வோல்சிங்கம், கேவிலார்,
வேளாங்கன்னி என்று எல்லா புனித ஸ்தலங்களும் அழைத்தன.
மற்றவர்களுக்காக தன்னை வருத்துவதிலும், ஈய்வதிலும் இன்பம் காண்பாய்
அதையும் செவ்வனவே  செய்து முடிப்பேன் என்பதில் உறுதி காண்பாய்
நீ பட்ட துன்பத்தினை நினைத்ததனாலோ என்னவோ இந்த பிரியம் உனக்கு.
நாம் அறியாத நற்செயல்கள் எல்லாம் புரிந்தாய் என்பதை
உன் பிரிவின் பின்னர் அறிந்தோம், மனக்கவலையுடன் பூரித்தோம்.

உயிர் பிரிவதென அறியாத உன்மனம் அந்நொடியில்
சொல்ல நினைத்தது என்னவோ உன் பிள்ளைகளுக்கு கூட
அச்சந்தர்பத்தை தர மறுத்ததேனோ எங்கள் அன்பு அம்மா
நீங்கள் சொன்ன வாக்கு பலித்தது தாயே, யார் தயவிலும் என்னுயிர் பிரியாதென்று.

நடப்பது எல்லாம் விதி என பொய் சொல்லி
எமக்குள் மனதை தேற்ற முயன்றோம்
இந்நொடி வரை எம்மனம் ஏற்க மறுக்கின்றது.
ஏனம்மா எமை விட்டு சென்றாய் என்ற அழுகைக்குரல் தொடர்கிறது.
எம் விழிகள் உம் விம்பத்துக்காய்   ஏங்குகின்றன…….,
நீ கற்றுக்கொடுத்த பாடங்களை முன்னெடுத்து
உம் நினைவுகளை உயிர்ப்பிப்போம்
எங்கள் சரித்திரம், எங்கள் குடும்ப தெய்வம் நீங்கள்தானம்மா.

"மண்ணில் வாழ்ந்து விண்ணுலகம் செல்லும்
தாயே அங்கு துணைவனின் துணையுடன் நல்வாழ்வு
வாழ இறைவன் அமைதி தருவார்"  
 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்