Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 JUL 1944
இறப்பு 07 MAR 2020
அமரர் செபஸ்ரி புஸ்பராணி 1944 - 2020 Vasavilan, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்ரி புஸ்பராணி அவர்கள் 07-03-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பர்ணாந்து அன்னமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான தாவீது றோசம்மா தம்பதிகளின் அன்பு  மருமகளும்,

காலஞ்சென்ற தாவீது செபஸ்ரி அவர்களின் அன்பு மனைவியும்,

டொமினிக் ஜீவா(சுவிஸ்), டெஸ்சி(லண்டன்), மேரி கொலஸ்ரிக்கா(லண்டன்), மேரி கிறிஸ்டெல்லா(கட்டார்), அருள் ராஜ்குமார்(உதவி ஆணையாளர்- இறைவரித் திணைக்களம், கொழும்பு), அன்ரனி ரெஜிஸ்குமார் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மில்ரட்(சுவிஸ்), சந்திரராஜா(லண்டன்), அலெக்ஸ் றொபின்(லண்டன்), மினோஷன்(கட்டார்), டயானா(ஆசிரியை- நல்லாயன் ம.வி கொட்டாஞ்சேனை), காமலீற்ற(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

 நல்லம்மா, காலஞ்சென்றவர்களான யேசு, பொணிபஸ், ராசாத்தி, மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நட்சத்திரம், புஸ்பம், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

றொஷானா, அனுஷன், அபிஷன், பிறிஜட், டெனிஸ், அனபெல்லா, அன்ஸ்கர், அன்றியானா, ஷாலட் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 08-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ணம் மலர்ச்சாலையில் மு.ப 08:00 முதல் பி.ப 06:00 மணி வரையிலும், 09-03-2020 திங்கட்கிழமை அன்று அவரது வசிப்பிடமான புதுக்குடியிருப்பு இல்லத்திலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 03:00 மணியளவில் புனித சூசையப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் புனித சூசையப்பர் சேமக்காலையில் அடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள்

கண்ணீர் அஞ்சலிகள்